உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியுள்ளது: விஜித் விஜயமுனி சொய்சா

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில், உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேசிய அரசாங்கத்தில் தனித்தனியாக போராடுவோம்.

தற்போது கொள்கைகளை பாதுகாக்க தகுதியான தலைவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.