மாலைத்தீவின் உயர்மட்டக் குழுவினரை சந்தித்த நாமல்

Report Print Evlina in அரசியல்

மாலைத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் மூசா சமீர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் மொஹமட் ஹூசைன் செரீப் ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதுடன், மாலைத்தீவு உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன், இந்த சந்திப்பை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்றையும் அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.