பொதுஜன முன்னணி தேர்தலில் வெற்றி பெறும்: நாமல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீறி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை ஊழல், மோசடியற்ற தூய்மையான அரசியலுக்காக தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும். என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ரவி கருணாநாயக்க இதனை கூறியுள்ளார்.

இதனிடையே ஐக்கிய தேசியக்கட்சியின் ஊழல், மோசடிகளால் வெறுப்படைந்துள்ளவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து வருவதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.