நாட்டிற்கு புதிதாக நல்லிணக்கம் தேவையில்லை: மேர்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லிணக்கம் என்பது இலங்கைக்கு புதிதாக ஏற்படுத்த வேண்டிய ஒன்றல்ல என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர்த்துக்கேயர் காலத்தில் இருந்தே இலங்கையில் நல்லிணக்கம் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தொன்று தொட்டு நல்லிணக்கம் இருந்து வருவதாகவும், இதனால், புதிதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.