மஹிந்த வழியில் மைத்திரி தரப்பு? தேர்தல் ஆணையம் தலையீடு

Report Print Aasim in அரசியல்

மாத்தளை மாவட்டத்தில் ஏழை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் விநியோகத்தை தேர்தல் ஆணையம் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்குவதாக தெரிவித்து சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு தேடும் பிரச்சாரமொன்றை பிரதியமைச்சர் லக்‌ஷ்மன் வசந்த பெரேரா முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தளை மாவட்டத்தின் சுதந்திரக் கட்சியின் தலைவராக அண்மையில் பிரதியமைச்சர் லக்‌ஷ்மன் வசந்த பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மேற்கண்ட நடவடிக்கையை செய்துள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான இலவச பொருட்கள் விநியோகம் எதனையும் மேற்கொள்ள முடியாது என்று தடைவிதித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில் அனுட்டானத்திற்கான துணிகளை விநியோகித்த விவகாரத்தில் ஒத்தாசையாக இருந்த லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.