ஐ.தே.க. இன் அமைப்பாளர் சுதந்திரக்கட்சியில் இணைவு

Report Print Aasim in அரசியல்

சிலாபம் ஐ.தே.க. இணை அமைப்பாளர் ஹிலாரி பிரசன்ன பெர்னாண்டோ நேற்று சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

சிலாபம் தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான நியோமல் பெரேராவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் இந்த கட்சித் தாவல் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஹிலாரி பிரசன்னவுடன் கிராமிய மட்ட ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் 40 பேரளவில் ஐ.தே.க.விலிருந்து விலகி தங்களை சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கட்சி தாவிய ஹிலாரி பிரசன்ன பெரேராவை இம்முறை சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் சிலாபம் நகர சபைக்கான தேர்தலில் களமிறக்க சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.