சுதந்திரக் கட்சிக்கு தொடர்ந்தும் அமைப்பாளர்கள் நியமனம்

Report Print Aasim in அரசியல்

உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்பு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் சுதந்திரக் கட்சிக்கான புதிய அமைப்பாளர்கள் நியமனம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அந்த வகையில், இன்றைய தினம் புதிதாக 8 பேர் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு இணை அமைப்பாளராக எம்.எஸ்.எம். சகாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி இணை அமைப்பாளர்களாக டீ.ஆர். இந்து குணதிலக்க, எம். நிஹால் விஜயானந்த, உபாலி சந்திரசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்ட இணை அமைப்பாளர்களாக சத்திரிய ராஜபுத்திர வீரசிங்க மற்றும் மஹிந்த பண்டார பக்மீவெவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட அமைப்பாளராக அனில் சந்திரநாத் வீரமன் நியமிக்கப்பட்டுள்ளார். திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளராக வை.ஜி. பந்துல சரத் குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் போது தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன, வடமேல் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.