மலேசிய பிரதமர் நாளை இலங்கை விஜயம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் நாளைய தினம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்று இலங்கை வரும் மலேசிய பிரதமர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மலேசிய பிரதமரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மலேசிய பிரதமருக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

மேலும், விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையிலும் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் மலேசிய பிரதமர் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார புரிந்துணர்வு மற்றும் வர்த்தகம், முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தையிலும் மலேசிய பிரதமர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.