பணத்தை கொள்ளையிட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்: எஸ்.பி திஸாநாயக்க குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதேச சபைகளின் உறுப்பினர்களில் பலர், நலன்புரி மற்றும் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையிட்டதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் கடந்த காலங்களில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அபிவிருத்திக்காக ஏழு, எட்டு கோடி ரூபா பணத்தை வழங்கினோம். எமது கட்சி அந்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பலர் அந்த பணத்தில் கொள்ளையிட்டனர். கிராமங்களில் உள்ளவர்களுக்கு இது தெரியும். அப்படி பணத்தை கொள்ளையிட்டவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இல்லாதது எமக்கு சாதகம் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.