இலங்கையின் எதிர்காலம் எது தெரியுமா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கொழும்பு துறைமுக நகரத்திற்கான திட்டத்தை ஆரம்பிக்கும் பொழுது பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்ததாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் எதிர்காலம் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர், நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் போது பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்தன. கடற்தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் பலர் எச்சரிக்கை விடுத்தனர்.

எனினும் அத்தனை எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்து தற்போது, கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும். எமது நாட்டின் எதிர்காலமாக கொழும்பு துறைமுக நகரம் இருக்கும் என்றார்.