உள்ளூராட்சி தேர்தல் எப்போது?

Report Print Ajith Ajith in அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தகவல் வெளியிட்டுள்ளார்.

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி தினத்தில் அல்லது அதன் பின்வரும் தினங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.