மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும்: ஜனாதிபதி மைத்திரி

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்றைய தினம்(16) இடம்பெற்ற அரச நத்தார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்காலத்திற்காக இனங்களுக்கிடையில் சமாதானமும், நல்லிணக்கமும் பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகிவரும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் உரையினை அறிந்த சமூக ஆர்வலர்கள் மீண்டும் ஓர் யுத்தம் ஏற்படும் என ஜனாதிபதி பயப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.