எட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மாற்றம்

Report Print Nivetha in அரசியல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரை சலுகை பொதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பஸ் தரிப்பு நிலையத்தின் கட்டடம் பிரதமர் தலைமையில் நேற்றைய தினம்(15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எட்டு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரை சலுகை பொதி வழங்கப்படவுள்ளதாகவும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.