இவர்களிடம் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியும்? ரில்வின் சில்வா கிண்டல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வேட்பு மனுக்களைக் கூட பிழையின்றி தயாரிக்க முடியாதவர்களிடம் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியும் என ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

சில கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

எமது கட்சி இப்பொழுதே வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. எமது கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிழை இன்றி வேட்பு மனுக்களை கூட இவர்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் எவ்வாறு ஆட்சி அதிகாரங்களை வழங்க முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போரின் கவனயீனமே இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.