மலேசியாவுடன் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து!

Report Print Nivetha in அரசியல்

மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் அவர் தங்கியிருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் மலேசிய பிரதமருடன் திங்கட்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதன்போது, இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதேவேளை, மலேசிய பிரதமர் இலங்கை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தையிலும் பங்குகொள்ளவுள்ளார்.