ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ள மலேசிய பிரதமர்

Report Print Kamel Kamel in அரசியல்
23Shares

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் நஜிப் பின் துன் அப்துல் ரசாக், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்திக்க உள்ளார்.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்குவதற்காக மலேசிய பிரதமர் நேற்று இலங்கைக்கு வந்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரி விடுத்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு மலேசிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை, மலேசிய பிரதமர் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.