லலித் வீரதுங்கவிடம் பொலிஸ் தலைமையகத்தில் விசாரணை

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எட்டு வாகனங்களை சந்தை விலையை விட இரண்டு மடங்கு அதிகமான விலைக்கு கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக லலித் வீரதுங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரச்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச பணத்தில் சில் துணிகளை விநியோகித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.