சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான செய்திகள் உண்மையில்லை என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விலகினர் என்று வெளியான செய்திகள் தவறானவை.
அவ்வாறு விலகினர் என்று பெயர் குறிப்பிடப்படும் 7 பேரில் 5 பேர் தாம் அப்படி விலகவில்லை என்று கடிதம் எழுதி கையளித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.