சுதந்திரக் கட்சியை அழிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன

Report Print Steephen Steephen in அரசியல்

தாமரை மொட்டுச் சின்னத்தில் வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சின்னாப்பின்னப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், கட்சி வலுவாக முன்னோக்கி செல்லும் எனவும் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய காலி மாவட்ட செயலகத்திற்கு இன்று வந்தே போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சின்னாப்பின்னப்படுத்தி அழிக்க சிலர் முயற்சித்தனர். அந்த முயற்சி தோல்வியடைந்து கட்சி வலுவடைந்துள்ளது. கட்சியை பிளவுப்படுத்த நினைத்தவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பர்களுக்கு உள்நோக்கம் இருக்கின்றது. வேறு நபர்கள் ஆட்சியமைக்கும் சூழலை ஏற்படுத்துவதே அந்த உள்நோக்கம். எனினும் அந்த முயற்சியை தோற்கடித்து எம்மால் கட்சியை வலுப்படுத்த முடிந்துள்ளது.

கட்சி என்ற வகையில் தேசிய தலைமைத்துவத்தில் இருந்து கிராம மட்டம் வரை வலுவான ஒருங்கமைப்பின் கீழ் முன்னோக்கி செல்ல இயலுமை கிடைத்துள்ளது.

எமது கட்சியில் இருந்து விலகியுள்ள தலைவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைய ஆரம்பித்துள்ளனர். அதேபோல் வேறு கட்சிகளில் தலைமை பதவிகளில் இருந்தவர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்த அனைத்து விடயங்களை நோக்கும் போது தேர்தலை எதிர்கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலுவாக இருக்கின்றது என்பது தெளிவு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் நாட்டை ஆட்சி செய்யும் நேரத்தில் கிராமங்களின் அதிகாரமும் கட்சிக்கு கிடைக்கும் என்பது உறுதி எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.