இலங்கை முழுவதும் வசித்து வரும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்க நேற்று தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய முதல் முறையாக இலங்கையில் தெலுங்கு பேசும் பிரதிநிதியாக முனியாண்டிகே தர்மே என்பவர் தாமரை மொட்டுச் சின்னத்தில் தலாவ பிரதேச சபைக்கு போட்டியிடுகிறார்.
அநுராதபுரம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் சில தொகுதிகளில் தெலுங்கு பேசும் மக்கள் தீர்மானிக்கக்கூடிய வாக்காளர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தெலுங்கு பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.