சுயேட்சைக்குழு வேட்பு மனுத் தாக்கல்

Report Print Suman Suman in அரசியல்
53Shares

கிளிநொச்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சைக்குழு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேசசபைகளில் இந்த குழு போட்டியிடவுள்ளது.

வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்,

மக்கள் ஒரு வினைத்திறன் மிக்க பிரதேசசபையை ஏற்படுத்த விரும்புவதுடன் கடந்த காலங்கள் போன்று பிரதேசசபைகளின் செயற்பாடுகள் இருக்கக் கூடாது என மக்கள் விரும்புவதாக கூறினார்.

எனவேதான் அவர்கள் இந்த முறை தங்களின் வட்டாரங்களிலிருந்து மக்கள் பணியாற்றக் கூடிய சிறந்த பிரதிநிதிகளை எமக்கு தெரிவு செய்து வழங்கியுள்ளனா்.

எனவே நாம் பிரதேசசபைகளின் அதிகாரத்திற்கு வருகின்ற போது மக்களின் விருப்பத்திற்கு அமைவாக வினைதிறன் உள்ள சபையாக மாற்றி செயற்படுத்தி காட்டுவோம் என குறிப்பிட்டார்.