முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கலாச்சாரத்தை மீட்க வேண்டும்: எம்.ரி.ஹசன் அலி

Report Print Nesan Nesan in அரசியல்

இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், தேசியக் கட்சிகளின் முகவர்களாக இருந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து, ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய கோணத்தில் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி கூட்டணியை அமைத்திருக்கின்றோம். மக்கள் விரும்பக்கூடிய தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் சென்று ஒட்டிக்கொள்வது ஒரு கலாச்சாரமாக இருக்கின்றது.

இதுதான் மிகப்பெரிய ஒரு மோசமான கலாச்சாரமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.