முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படத்தை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் தோல்வியைத் தழுவிட நேரிடும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹிந்த ராஜபக்சவின் உருவப்படத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய வேட்பாளர்களிடம் கோரியிருந்தார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்குப் பதிலளிக்கையில், மஹிந்தவின் உருவப்படத்தை பிரசாரங்களில் பயன்படுத்தினால் வாக்குகள் குறையுமே தவிர கூடாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவின் இந்த யோசனையை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.