ரணிலின் அதிரடி உத்தரவினால் ஆட்டங்கண்ட கொழும்பின் பிரபலங்கள்!

Report Print Vethu Vethu in அரசியல்
1352Shares

இலங்கையில் சிறிய தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளன.

வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுக்கு இணையாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறை நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரின் வேட்பு மனுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பாதாள உலக குழுவுக்கு தொடர்பு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரின் மகனை, கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் இணையக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கண்டிப்பான உத்தரவுக்கு அமைய அந்த நடவடிக்கை நேற்று அதிகாலை தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் வர்த்தகர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அவரது மகனை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வைக்க கொழும்பு மாவட்டத்தின் பிரபலங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பில் தகவல் வெளியாகியவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உத்தரவிற்கமைய குறித்த நபரின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக பல நோக்கங்களின் அடிப்படையில் களமிறக்க போடப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முதற்கட்டத்தில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 248 மன்றங்களுக்குமாக 341 உள்ளூராட்சி அமைப்புக்களுக்காக வேட்புமனுக்கள் ஏற்கனப்பட்டன.

மொத்தமாக 20 அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.