தேர்தலை இலக்கு வைத்து குழந்தைகளுடன் விளையாடும் நாமல்

Report Print Nivetha in அரசியல்
42Shares

ஹம்பாந்தோட்டை - தங்காலை பகுதியில் உள்ள நவஜீவன சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அங்குள்ள சிறுவர்களை சந்தித்துள்ளார்.

இதன்போது குறித்த நிலையத்தில் இருந்த சிறுவர்களுடன் நாமல் விளையாடும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த காணொளியை நாமல் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்மன்றத் தேர்தல் காலம் நெருங்கிவிட்ட நிலையில் நாமல் சமூக சேவைகளில் ஈடுபட தொடங்கியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சி தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.