யாழில் படையினர் வசமுள்ள காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும்: இராணுவத்தளபதி உறுதி

Report Print Sumi in அரசியல்
62Shares

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான பதில் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்க அதிபர் இராணுவத்தளபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், பல காணிகள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலை கட்டடங்கள் போன்றவற்றையும் விரைவில் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும் அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தாம் சாதகமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக இராணுவத்தளபதி உறுதி வழங்கியுள்ளார்.