சரித்திரப் பயணத்தில் இணைந்து கொள்ள மலையக தேசிய முன்னணி அழைப்பு

Report Print Sinan in அரசியல்
44Shares

சரித்திரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம் என மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட போதே இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மலையக தேசிய முன்னணி இம்முறை இணைந்து போட்டியிடுகின்றது.

அந்த வகையில் மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையில் நேற்றைய தினம் நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தில் நிலவி வரும் மரபு ரீதியான அரசியல் கலாச்சாரத்தினை மாற்றியமைத்து புதியதொரு சரித்திரம் படைக்கும் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன்களை முதன்மை நோக்கமாகக் கொண்ட மலையக தேசிய முன்னணி, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி சரித்திர சாதனை படைப்பது உறுதி என்றும் குறிப்பி்ட்டார்.