பதுளையில் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் ஐ.தே.க கைப்பற்றும்

Report Print Thirumal Thirumal in அரசியல்
25Shares

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் மக்களுக்கு அரசியல் மற்றும் வாக்குரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. இதனை எமது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அந்தவகையில், சிங்கள மக்களைவிட தமிழ் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சி மீது அபார பற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பசறை உள்ளிட்ட முழு மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து, பதுளையில் நாம் அமோக வெற்றியை பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.