ரணிலுக்கு நெருக்கமானவரின் அதிகாரத்தை குறைக்கவே புதிய பிரதியமைச்சு பதவி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலேயே புதிதாக சட்டம் ஒழுங்குத்துறைக்கான பிரதியமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக தற்போது சாகல ரட்நாயக்க செயற்பட்டு வருகிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான இவர், முன்னைய ஆட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவைக் கைது செய்வதில் தயக்கம் காட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்

இந்தநிலையிலேயே புதிதாக அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பியசேன கமகேக்கு பிரதி நீதி மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை தாம் இணைந்து தோற்கடித்த முன்னைய அரசாங்கத்தை காட்டிலும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஊழல் மிக்கதாக இருக்கும் என்று அண்மையில் ஜனாதிபதி கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தமையை ஆங்கில ஊடகம் ஒன்று கோடிட்டுள்ளது.