அர்ஜுனனாக மாறிய மைத்திரி! இலங்கையில் மற்றுமொரு குருஷேத்திரம்

Report Print Vethu Vethu in அரசியல்

தூய்மையான அரசியலுக்காக வெட்டப்படுபவர்கள் குறித்து தனக்கு பிரச்சினை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தவுள்ள பயணத்தில் தனது வாளுக்கு இலக்காகுபவர்கள் குறித்து தனக்கு பிரச்சினை இல்லை என ஜனாதிபதி நேற்று குறிப்பிட்டுள்ளார்.

தனது வாளுக்கு எந்த கட்சி, எந்த உறவினர், நெருக்கமானவராக அல்லது யாருடைய, யார் என்பது எல்லாம் தனக்கு முக்கியம் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் அர்ஜுனனின் வாளினால் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள் கொல்லப்பட்டனர். இதனை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.