மல்வத்து, அஸ்கிரி பீடாதிபதிகளின் கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

அமைதியான முறையில் தேர்தலை நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.

கண்டி மாநகர சபையின் முன்னாள் மேயர் ராஜா புஸ்பகுமார நேற்றைய தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தின் போது மாநாயக்க தேரர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வன்முறைகள் அற்ற சமாதானமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காது அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

தொகுதிவாரி அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதனால் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.

மோதல்கள் முரண்பாடுகளை களைந்து அமைதியான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.