தீப்தியின் ஆட்டம் மீண்டும் கிழக்கில் ஆரம்பம்?

Report Print Nivetha in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி, காலணித்துவ ஆளுநர் ஒருவரின் மனைவியைப் போன்று செயற்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் இந்து பக்தர்களை தீப்தி தூற்றிய சம்பவம் தொடர்பிலேயே அமைச்சர் மனோ தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

தீப்தியின் செயற்பாடு நாட்டின் சகவாழ்விற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் கூட பாதணிகளை கழற்றிவிட்டு கோயிலுக்குள் பிரவேசித்துள்ளதாகவும், தீப்தி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மஹிந்த ஆட்சியில் பதவிலியில் இருந்த ரோஹித்த போகொல்லாகம பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியிருந்ததுடன், அவரது மனைவியும் அதில் தொடர்புபட்டிருந்தார்.

அந்த வகையில், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த ஆட்சியில் கொழும்பின் பிரபல வைத்தியர் ஒருவரை தீப்தி தாக்கியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் நல்லாட்சி அரசாங்கம், கிழக்கின் ஆளுநராக ரோஹித்தவை நியமித்திருந்த நிலையில் மீண்டும் தீப்தி அதிரடியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.