மகிந்த காலாவதியான அரசியல்வாதி: அமைச்சர் மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்ச என்பவர் காலாவதியான அரசியல்வாதி எனவும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டும் அளவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகோ எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதற்காக மகிந்த ராஜபக்சவை புகைப்படத்துடன் வெற்றிலை சின்னத்தை உள்ளடக்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமரவீர இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் தருவாயில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள மக்கள் ஆதரவை கண்டு ஆத்திரமடைந்துள்ளவர்கள், இவ்வாறான சேறுபூசும் பிரசாரங்கள் மூலம் தமக்கு சாதகத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உண்மையாக கொள்கைகளை பாதுகாப்பது யார் என்பதை மக்கள் அறிந்துக்கொண்டுள்ளனர். இதனால், கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்போரின் புகைப்படங்கள் எதிர்காலத்திலும் கட்சிக்கு தேவைப்படாது எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.