ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறினாரா?

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை குறைத்து 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விடயங்களை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அண்மைகாலமாக பிரதமருக்கு அறிவிக்காமல் இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமை இந்த விமர்சனத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பியசேன கமகேவை சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்க போவதாக பிரதமருக்கோ, துறைக்கு பொறுப்பான அமைச்சருக்கோ அறிவிக்கவில்லை என பேசப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் இந்த விடயம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்களிடம் கருத்தை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.