இலங்கையின் நடவடிக்கையால் மகிழ்ச்சியில் தமிழிசை: மோடிக்கு நன்றி

Report Print Shalini in அரசியல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களில் 69 பேரை விடுவிக்கும் இலங்கையின் நடவடிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தமிழிசை மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.

இது தொடர்பில், “தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் வைத்துள்ள அக்கறைக்கும், தொடர்ந்து அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவுக்கும் நன்றி” என தமிழிசை பதிவிட்டுள்ளார்.