அரசுடன் தலைவர்கள் இணையலாம் ஆனால் மக்கள் இணைய மாட்டார்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட போதிலும் மக்கள் இணைந்துக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குணசிங்கபுர, பூர்வாராம விகாரையில் நேற்று இரவு இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தலைவர்கள் வரப்பிரசாதங்களை பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும் மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.