யாழ். சாதனையாளரை நேரில் சந்தித்த போது வடக்கு ஆளுநர் கூறியது

Report Print Steephen Steephen in அரசியல்

கல்வியில் வடமாகாணம் முதலிடத்தில் இருந்தாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ். மாணவனை வடக்கு ஆளுநர் இன்றைய தினம் சந்தித்தார்.

இதன்போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடக்கு மாகாணமே சிறந்த கல்வியியலாளர்களை தந்ததது. பல ஆண்டுகளாக இந்த நாட்டில் உருவாகிய புத்திசாலிகள், பொறியியலாளர்கள், விசேட நிபுணர்கள், முகாமைத்துவ பிரதானிகள் வடக்கில் இருந்தே தெற்குக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தெற்கில் மருத்துவமனைகளில் தற்போது சேவையாற்றும் சிறந்த மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கில் இருந்து சென்றவர்கள்.

எனினும் யாழ்ப்பாணத்திலும் அதற்கு அருகில் உள்ள தீவுகளில் இருக்கும் வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இல்லை.

இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், போருக்கு பின்னர் அமைதி ஏற்பட்ட பின்னரும் கல்வி தரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனை நிர்வாக அதிகாரிகளின் தவறாகவே நான் காண்கின்றேன். முழு யாழ்ப்பாணத்திலும் மீண்டும் கல்வியை மேம்படுத்த வேண்டும். கல்வியே யாழ்ப்பாணத்திற்கு இருக்கும் ஒரே விடுதலை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.