அமெரிக்காவின் வரிச்சலுகை நீக்கம் இலங்கையை பாதிக்காது!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை அமெரிக்கா தொடராதிருக்க எடுத்த நடவடிக்கையானது இலங்கையின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குறித்த நடவடிக்கையானது 120 நாடுகளுக்கு பொருத்துவதாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நீக்கப்பட்டால் அது ஏற்றுமதியில் 3 வீத விலை அதிகரிப்பையே ஏற்படுத்தும் என்று தேசியக்கொள்கை மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்

இலங்கையின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியானது 2016இல் 2.8 பில்லியன் டொலர்களாக இருந்தது. இதில் 173 மில்லியன் டொலர்கள் அதாவது 6.2 வீத தொகையே ஜீ.எஸ்.பியாக கிடைத்தது.

ஆடை ஏற்றுமதிகளுக்கு ஒரு வீத சலுகையே கிடைத்தது. அதாவது 27 மில்லியன் டொலர்களாகும்.

எனவே அமெரிக்காவின் இந்த வரிச்சலுகை நீக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை எவரும் விளங்கிக்கொள்ள முடியும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.