த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் அம்பாறையில் கலந்துரையாடல்

Report Print Nesan Nesan in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை நற்பிட்டிமுனை சுமங்களி திருமண மண்டபத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவிருக்கும் கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, திருக்கோயில், பொத்துவில் பிரதேசங்களில் இருந்து வருகை தந்த உறுப்பினர்களது அறிமுக நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், இந்த முறை உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கவிருக்கும் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.