புது வருடத்தில் புத்துணர்வுடன் வேலையை ஆரம்பித்தார் சம்பந்தன்

Report Print Shalini in அரசியல்

மலர்ந்துள்ள புத்தாண்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமது பணிகளை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் மங்கள விளக்கேற்றி அலுவலக பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதில், அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கலந்துகொண்டதுடன், இனிப்பு பண்டங்களும் பரிமாறப்பட்டுள்ளன.

அண்மையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பந்தன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

தேர்தல் காலம் நெருங்கிவிட்ட நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், தற்போது முழு உற்சாகத்துடன் புது வருடத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.