எனது ஆட்சியில் பினை முறி மோசடியா? விசாரணை நடத்துமாறு மஹிந்த கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

எனது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில் தவறில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து மெரிவிக்கையில்,

2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதனை நான் எதிர்க்கவில்லை.

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எனக்கு பூரண நம்பிக்கையுண்டு.

அத்துடன், இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனை நான் விரும்புகின்றேன்.

மேலும், மத்திய வங்கி பிணை முறி மோசடிகளினால் நாட்டுக்கு முதலீடுகள் கிடைப்பதில் சர்ச்சைகள் ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.