தமிழர் தன்மானத்தை குழி தோண்டி புதைத்த மகிந்தவின் தோளில் திகா

Report Print Thirumal Thirumal in அரசியல்

2005ஆம் ஆண்டு திகாம்பரம் மகிந்தவின் தோளில் தொங்கிக் கொண்டு, மகிந்த சிந்தனை தான் இலங்கையில் சிறந்த சிந்தனை. ரணில் மோசடிக்காரன் என்று கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு நோர்வூட் பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

திகாம்பரம், ஆறுமுகன் அண்ணாச்சிகள் நினைப்பது போன்று தோட்ட தொழிலாளர்கள் குட்ட குட்ட குனியும் பரம்பரையும் அல்ல. கொண்டைக்கட்டிய பரம்பரையும் அல்ல. தொழிலாளர்கள் இன்று சிந்திப்பதற்கு தலைப்பட்டுள்ளார்கள்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்தவின் பக்கத்தை சார்ந்திருந்த திகாம்பரம் அண்ணாச்சி மகிந்தவுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னார்.

நாட்டின் இன்றைய பிரதமர் ரணில் 83ஆவது ஆண்டு ஜூலை கலவரத்தில் நமது மக்களை அழித்து சொத்துக்களை சூறையாடியவர் என்றும் சொன்னார்.

இவ்வாறு சொன்ன திகாம்பரம் இன்று ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தான் நாட்டில் நடப்பதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் மக்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றார்.

இதுநாள் வரைக்கும் இவர்கள் இருவரும் நினைத்துக்கொண்டு இருப்பது குட்ட குட்ட குனிந்து செல்ல கூடிய பரம்பரை தோட்ட தொழிலாளி பரம்பரை என்றும், கொண்டைக்கட்டிய பரம்பரை தொழிலாளர்கள் என்றும்.

தொடர்ந்தும் இவர்கள் இருவரும் போடுகின்ற தாளத்திற்கு ஆடுகின்ற பொம்மைகள் என தொழிலாளர்கள் நினைக்கின்றார்கள்.

கம்பளிக்கு 10 ரூபாய் என்ற காலம் அவர்களை ஏமாற்றிய காலம் போய்விட்டது. இன்று தொழிலாளர்கள் சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாறாக திகா, தொண்டா ஆகிய இரு கட்சிகளுக்கும் தொரடந்தும் வாக்களித்தால் தன் கையால் மண்ணை வாரி தன் பிள்ளையின் மேல் போடுவதற்கு சமமாகி விடும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Latest Offers