தேர்தல்கள் தொடர்பான காரியாலயங்கள், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் என்பவற்றை இம் மாதத்திற்குள் அகற்றுமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தல் விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, இம் மாதம் 31ஆம் திகதி முன்னர் அவற்றை அகற்றுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.