ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Report Print Evlina in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.

பொரள்ளையில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதை தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பிரதமர் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு உள்ளமை வெளிவந்துள்ளது.

இதையடுத்தே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.