பிரதமர் குற்றவாளி இல்லை: பைஸர் முஸ்தபா

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதமருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் அமுனுகம, ஊழல், மோசடிகளினால் மக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அதனை மீண்டும் அறிவிடும் வகையில் சட்டத்திருந்தங்களை செய்ய தேவையான புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளில் முக்கியமானது என கூறியுள்ளார்.