கொழும்பில் ஒன்றிணையும் முக்கிய அரசியல் தலைவர்கள்!

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பிரதான தேர்தல் பரப்புரையின் முதல்கட்டக் கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகின்றது.

பொரளை, கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் ரணிலின் அழைப்பின் பிரகாரம் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

ஐ.தே.கவில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்படவுள்ளது.