ரஜினியின் அரசியல் பிரவேசம்: வடக்கு முதல்வரின் நிலைப்பாடு?

Report Print Sumi in அரசியல்

ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் அரசியலுக்குள் வருவதை தான் எப்போதும் வரவேற்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை யாழில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் அரசியலில் ஈடுபடவுள்ளதாக சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச இலங்கையிலிருந்து முதலாவதாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வட மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.