கருணாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Report Print Shalini in அரசியல்

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

கருணா பிரதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத ஜீப் வாகனத்தினை மீள கையளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் கருணா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அண்மையில் இந்த வழக்கிலிருந்து நிரந்தரமாகவும் விடுதலையாகினார்.

இந்த நிலையில் இவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணங்களுக்கான தடையும் தற்போது நீங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.