தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Report Print Nivetha in அரசியல்

தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளுக்கான அதிக பட்ச கட்டணத்தை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது.

சத்திர சிகிச்சைகளுக்கு தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை மட்டுப்படுத்துவதற்காகவே சுகாதார அமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.

அண்மையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தனியார் வைத்தியசாலைகளில் ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இதன்போது, ஒரே வகையான சத்திரசிகிச்சைகளுக்கு, ஒவ்வொரு தனியார் வைத்தியசாலைகளிலும் வெவ்வேறான கட்டணங்கள் அறவிடப்படுவது தெரியவந்துள்ளது.

இதனால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சத்திரசிகிச்சைகளுக்கான அதிக பட்ச கட்டணத்தை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, விரைவில் அதிக பட்ச கட்டணம் குறித்து அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.