இலங்கை மதுபான நிலையங்களில் பெண்கள்? கடுமையான தீர்மானம் எடுக்கப்படும்

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் மதுபான நிலையங்களில், பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமை தொடர்பில் தான் அதிருப்தி அடைவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனை தொடர்பான நிதி அமைச்சரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபான நிலையங்களில், மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதுடன், புதிய நடைமுறை தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் இட்டிருந்தார்.

இந்த நிலையில் மதுபானம் விற்பனை செய்யும் கால எல்லை தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய இதுவரை காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்த மதுபான விற்பனை நிலையங்கள், புதிய திருத்தத்திற்கு அமைய காலை 11 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.